தமிழ்நாடு பாஜகவின் தலைவரை தேர்வுசெய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் சென்னையிலுள்ள தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு பாஜகவின் தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டதையடுத்து தனது பதவியை ராஜினாமா செய்தார். இரண்டு மாதங்களைக் கடந்தும் உள்கட்சி பூசலால் தற்போதுவரை தமிழ்நாடு பாஜகவிற்கு மாநிலத் தலைவர் நியமனம் செய்யப்படவில்லை. தற்போது நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக சில இடங்களில் வெற்றிபெற்றுள்ளதைக் கருத்தில்கொண்டும் 2021ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்குள் கட்சியை பலப்படுத்துவதற்கும் மாநிலத் தலைவரை நியமிக்க […]
