தமிழ்நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இதுவரை யாரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை எனவும், சீனாவில் இருந்து வருகை தந்த பெண்ணொருவர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கண்காணிப்பில் உள்ளார் என்றும் சென்னை ராஜீவ்காந்தி அரசுப் பொது மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி தெரிவித்துள்ளார். சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் சென்னை மருத்துவக் கல்லூரியின் முதல்வரான ஜெயந்தி செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது அவர், ” பொது மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் நோய் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கை […]