ஓடும் போதே மாநகரப் பேருந்தின் பின்புறத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கீழ்கட்டளை நோக்கி மாநகர பேருந்து ஒன்று திருவான்மியூரில் இருந்து புறப்பட்டுள்ளது. இந்தப் பேருந்தை சிவானந்தம் என்ற ஓட்டுனர் ஓட்டி சென்றுள்ளார். இந்த பேருந்தில் 10க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்துள்ளனர். இதில் கண்டக்டராக சங்கரன் என்பவர் பணிபுரிந்துள்ளார். இந்நிலையில் மடிப்பாக்கம் சதாசிவம் நகர் அருகில் சென்று கொண்டிருந்த போது திடீரென மாநகரப் பேருந்தின் பின்புறத்தில் இருந்து கரும்புகை வெளியேறி உள்ளது. […]