லாரி சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் விம்கோ நகர் பகுதியில் ஐசக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிருபாகரன்(21) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கிருபாகரன் தனது நண்பரான ஜீவா(19) என்பவருடன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அவர்கள் திருவொற்றியூர் ஜோதி நகர் அருகே சென்றபோது வேகமாக […]
