Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மாயமான சிறுவர்கள்…. மேலாளர் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

காப்பகத்தில் தங்கியிருந்த 6 சிறுவர்கள் திடீரென காணாமல் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ராயபுரம் பகுதியில் அரசு குழந்தைகள் காப்பகம் அமைந்துள்ளது. இந்த காப்பகத்தில் 40-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் தங்கியிருக்கின்றனர். இந்நிலையில் இந்த காப்பகத்தில் தங்கியிருந்த 6 சிறுவர்கள் திடீரென காணாமல் போய் விட்டனர். இதுகுறித்து காப்பகத்தின் மேலாளரான சுரேஷ் குமார் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் காணாமல் போன சிறுவர்களை தீவிரமாக தேடி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பாதுகாப்பு துறையில் வேலை இல்லையா?…. மாற்றுத்திறனாளிகளின் போராட்டம் …. சென்னையில் பரபரப்பு…!!

சென்ட்ரல் இரயில் நிலையத்தை முற்றுகையிட்டு மாற்றுதிறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சென்னையில் உள்ள சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டத்திற்கு மாநில தலைவர் ப.ஜான்சிராணி தலைமை வகித்துள்ளார். மேலும் இந்த போராட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் எஸ். நம்பிராஜன் உள்பட 50 கலந்து கொண்டு பேசியுள்ளனர். இதுகுறித்து நம்பிராஜன் கூறும் போது அரசு பணிகளில் 4 சதவீத இட […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

செடி, கொடிகளை வெட்டிப்போட்ட பெண்…. மோதிக்கொண்ட இருதரப்பினர் …. போலீஸ் நடவடிக்கை….!!

வேனை நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக இரு தரப்பினர் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை மாவட்டத்திலுள்ள பட்டாபிராம் தேவராஜபுரம் என்ற பகுதியில் வேன் உரிமையாளரான பாபு என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்குச் சொந்தமான வேனை அதே பகுதியில் வசிக்கும் லட்சுமி என்பவரின் வீட்டருகே நிறுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்நிலையில் லட்சுமி அவ்விடத்தில் செடி மற்றும் கொடிகளை வெட்டி போட்டதன் காரணமாக பாபுவால் வேனை அங்கு நிறுத்த முடியவில்லை. இது தொடர்பாக பாபு லட்சுமியிடம் கேட்டபோது  […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சிலையை கரைக்க சென்ற சிறுவன்…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்

விநாயகர் சிலையை கரைக்க சென்ற சிறுவன் தண்ணிரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்திள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் மோகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கெளதம் என்ற மகன் இருந்துள்ளான். இந்த சிறுவன் நூம்பலில் இருக்கும் தனது மாமா வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் உறவினர் ஒருவருடன் அப்பகுதியில் உள்ள குளத்தில் விநாயகர் சிலையை கரைப்பதற்காக கெளதம் சென்றுள்ளார். இதனையடுத்து சிலையை கரைத்த பின் அதே குளத்தில் கௌதம் குளித்து கொண்டிருக்கும் போது திடீரென தண்ணிரில் மூழ்கி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தப்பித்து ஓடிய நண்பர்கள்…. கரை ஒதுங்கிய வாலிபரின் சடலம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ராட்சத அலையில் சிக்கி மாயமான வாலிபரின் சடலம் கரையொதுங்கியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள எண்ணூர் பெரியகுப்பம் கடற்கரையில் வாலிபரின் சடலம் கரை ஒதுங்கியதை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வாலிபரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட வாலிபர் அரியவாயல் பகுதியில் வசித்த அப்துல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அடையாளம் காட்டிய தாயார்…. நண்பரின் வெறிச்செயல்…. வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்…!!

தவறாக பேசியதால் வாலிபர் தனது நண்பரை வெட்டி கொலை செய்து கடலில் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள அடையாறு பகுதியில் மகேஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் காணாமல் போனதாக இவரது தாயார் பஞ்சவர்ணம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மகேஸ்வரனை தீவிரமாக தேடி வந்துள்ளனர். இதற்கிடையில் சீனிவாசபுரம் கடற்கரையில் கரை ஒதுங்கிய ஒரு ஆணின் சடலத்தை காவல்துறையினர் சென்று பார்த்துள்ளனர். அப்போது பஞ்சவர்ணம் கரை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

முதலிரவில் நடந்த சம்பவம்…. புதுப்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை மாவட்டத்தில் உள்ள பாலங்குப்பம் கிராமத்தில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும், இவரது அத்தை மகளான நந்தினி என்ற பெண்ணிற்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் முதலிரவு அன்று கார்த்திகேயன் நந்தினியுடன் பேசிக்கொண்டிருந்தார். இதனையடுத்து நந்தினி தூங்கிய பிறகு கார்த்திகேயன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதன் பின் காலை 6 மணிக்கு எழுந்து பார்த்த நந்தினி தனது கணவர் தூக்கில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. தப்பி செல்ல முயன்ற நபர்…. விரட்டி பிடித்த போலீஸ்…!!

ஜவுளிக்கடையில் திருடிவிட்டு தப்பி ஓட முயன்ற மர்ம நபர்களில் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள அரும்பாக்கம் பகுதியில் ஜவுளி கடை ஒன்று அமைந்துள்ளது. இந்த கடையின் பூட்டை உடைத்து 2 மர்ம நபர்கள் உள்ளே சென்றுள்ளனர். இந்நிலையில் அந்த மர்ம நபர்கள் கடையில் இருந்த துணிகளை திருடிக் கொண்டு வெளியே சென்றுள்ளனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த காவல்துறையினரை பார்த்ததும் இரண்டு பேரும் தப்பித்து செல்ல முயற்சி செய்துள்ளனர். ஆனால் காவல்துறையினர் ஒருவரை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெண்களுக்கு நடந்த கொடுமை…. மர்ம நபர்களின் அட்டூழியம்…. போலீஸ் நடவடிக்கை…!!

பெண்களிடமிருந்து தங்க சங்கிலியை பறித்த குற்றத்திற்காக 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் கவிதா என்பவர் போலீசாக வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில் கவிதா தன்னுடன் பணிபுரியும் போலீஸ்காரரான விஜயகுமார் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்றுள்ளார். இவர்கள் திருவல்லிக்கேணி பகுதியில் சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் கவிதாவின் கழுத்தில் அணிந்திருந்த 9 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திறந்து கிடந்த ஷட்டர்…. உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

ஜவுளிக்கடையில் 2 1/2 லட்ச ரூபாய் மதிப்புள்ள துணிகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணாநகர் பகுதியில் ஜெயக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜவுளிக்கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடைக்கு சென்ற ஜெயக்குமார் ஷட்டர் திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் உள்ளே சென்று பார்த்த போது கடையில் இருந்த 2 1/2 லட்ச ரூபாய் மதிப்புள்ள துணிகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மகனை கண்டித்த பெற்றோர்…. சிறுவன் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள செங்குன்றம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவசக்தி என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சிவசக்தி சரியாக பள்ளிக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் சிவ சக்தியை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த சிறுவன் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சாதகமாக வழங்கிய தீர்ப்பு…. குடும்பத்தினருக்கு நடந்த விபரீதம்…. சகோதரர்கள் கைது…!!

சொத்து பிரச்சனையில் குடும்பத்தினரை சகோதரர்கள் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள ஆயிரம்விளக்கு பகுதியில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும், இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் ஹரி பிரசாத் மற்றும் அவரது சகோதரர் அருண் ஆகியோருக்கும் இடையே சொத்து பிரச்சினை காரணமாக ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம் மணிக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்நிலையில் ஹரி பிரசாத் மற்றும் அருண் ஆகியோர் மணியின் வீட்டிற்குள் அத்துமீறி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நடந்து சென்ற வாலிபர்…. மர்ம நபர் செய்த செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!

செல்போன் பறித்து சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள அமைந்தகரை பகுதியில் சோரா என்பவர் வசித்து வருகிறார். இவர் சூளைமேடு நமச்சிவாயபுரம் பாலம் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற மர்ம நபர் சோராவின் கையில் வைத்திருந்த செல்போனை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இது குறித்து சோரா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் செல்போன் பறித்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இழுத்து சென்ற ராட்சத அலை….. கரை ஒதுங்கிய மாணவரின் உடல்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ராட்சத அலையால் இழுத்து செல்லப்பட்ட மாணவரின் உடல் கரை ஒதுங்கி உள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள பல்லாவரம் பகுதியில் அக்பர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தாம்பரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகின்றார். இந்நிலையில் அக்பர் தனது நண்பர்களான யுவராஜ், சதீஷ்குமார், ரீகன், சேக், தமிழ், புருஷோத்தமன் போன்றோருடன் மெரீனா கடற்கரைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து யுவராஜ், ரீகன், புருஷோத்தமன், அக்பர் ஆகிய 4 பேரும் கடலில் குளித்து கொண்டிருந்த போது மற்ற 3 பேர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அமிலத்தை கலந்தனரா….? இறந்த ஆயிரக்கணக்கான மீன்கள்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

ஏரியில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. சென்னை மாவட்டத்திலுள்ள வேங்கைவாசல் ஊராட்சியில் இருக்கும் ஏரியில் திடீரென ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்ததை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் செத்து மிதக்கும் மீன்களால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இது குறித்து அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கூறும் போது, ஏரியில் விஷத்தன்மை வாய்ந்த அமிலத்தை யாரேனும் கலந்ததால் மீன்கள் செத்து மிதந்ததா என அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். இதனை அடுத்து செத்து கிடைக்கும் மீன்களை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

15 லட்ச ரூபாய் பொருட்கள் நாசம்…. திடீரென ஏற்பட்ட விபத்து…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

கடையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 15 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமாகி விட்டது. சென்னை மாவட்டத்திலுள்ள திருமுல்லைவாயல் பகுதியில் கோபி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் பேக்கரி கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்த கடையில் திடீரென தீ பற்றி எரிய ஆரம்பித்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கடையில் பற்றி எரிந்த தீயை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? பெயிண்டருக்கு நடந்த விபரீதம்…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

பெயிண்டர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள பெரியமேடு பகுதியில் பெயிண்டரான சுபாஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஆஷா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 3 வயதில் பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் சுபாஷ் தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்த ஆஷா தனது கணவர் தூக்கில் சடலமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சாலையின் நடுவே நின்ற லாரி…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…. சென்னையில் பரபரப்பு…!!

சாலையில் பழுதாகி நின்ற லாரியால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள குமணன் சாவடியில் இருக்கும் தனியார் திருமண மண்டபத்தில் பா.ஜ.க சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றதால் அப்பகுதியில் ஏராளமானோர் சாலையோரம் வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளனர். இந்நிலையில் தண்ணீர் ஏற்றி சென்ற லாரி சாலையின் நடுவே பழுதாகி நின்றதால் வாகனத்தை இயக்க முடியாமல் டிரைவர் சிரமப்பட்டுள்ளார். மேலும் நடுரோட்டில் பழுதாகி நின்ற லாரியால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த போக்குவரத்து காவல்துறையினர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வேலை பார்த்த இன்ஜினியர்….. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மின்சாரம் தாக்கி இன்ஜினியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மாங்காடு பகுதியில் பிரகாஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சிவில் இன்ஜினியராக இருக்கிறார். இந்நிலையில் பிரகாஷ் பாரிவாக்கத்தில் இருக்கும் காவலாளிகள் தங்கும் குடிசையில் மின்விசிறி பொருத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பிரகாஷ் உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று பிரகாஷின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

செல்போனில் பேசிய கணவர்…. மகளுடன் பெண் எடுத்த விபரீத முடிவு…. சென்னையில் பரபரப்பு…!!

தாய் தனது மகளுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள பாடி பகுதியில் அசோக் ராஜபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு சிவதர்ஷினி என்ற மகளும், சிவனேசன் என்ற மகனும் இருந்துள்ளனர். இந்நிலையில் தான் நடத்தி வரும் ஹோட்டலில் வேலை பார்த்து விட்டு அசோக் ராஜபாண்டியும், சிவனேசனும் வீட்டிற்கு சென்றுள்ளனர். இதனை அடுத்து ராஜலட்சுமியும், சிவதர்ஷினியும் தூக்கில் தொங்குவதை பார்த்து ராஜபாண்டி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வீட்டிலிருந்து வந்த துர்நாற்றம்…. அழுகிய நிலையில் மீட்கப்பட்ட பெண்…. போலீஸ் விசாரணை…!!

பூட்டிய வீட்டுக்குள் பெண் சடலமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள காட்டுப்பாக்கம் பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கார்த்திக் அமீனா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் கார்த்திக் ஆந்திராவில் பணிபுரிந்து வருவதால் 10 நாட்களுக்கு ஒரு முறை அமீனா தனது கணவரை பார்ப்பதற்காக ஆந்திராவிற்கு சென்று வருவது வழக்கம். இந்நிலையில் அமீனாவின் வீட்டு கதவு பூட்டி இருந்ததால் அக்கம் பக்கத்தினர் அவர் ஆந்திரா சென்றிருக்கலாம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

காற்றாடியை பிடித்த சிறுவன்…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

காற்றாடியை பிடிக்க முயற்சி செய்த போது மின்சாரம் தாக்கி சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மதுரவாயல் பகுதியில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிஷோர் என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பெற்றோர் வேலைக்கு சென்ற நேரத்தில் கிஷோர் தனது நண்பர்களுடன் வீட்டின் மாடியில் காற்றாடி பறக்கவிட்டு விளையாடி கொண்டிருந்தான். இதனை அடுத்து திடீரென அறுந்த காற்றாடியை எட்டி பிடிக்க […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பாட்டில்களை உடைத்த ஊழியர்கள்…. திடீரென ஏற்பட்ட தீ விபத்து…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

பழைய இரும்பு குடோனில் பற்றி எரிந்த தீயை 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்து விட்டனர். சென்னை மாவட்டத்திலுள்ள தாம்பரம் பகுதியில் மணிவண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கிஷ்கிந்தா சாலையில் பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் குடோன் வைத்து நடத்தி வந்துள்ளார். இந்த குடோனில் 20-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் வாசனை திரவிய பாட்டில்களை உடைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு கொண்டிருந்த போது அதிலிருந்து வந்த கியாசால் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஓட ஓட விரட்டிய மர்ம நபர்…. தொழிலாளிக்கு நடந்த கொடூரம்…. போலீஸ் விசாரணை…!!

கூலி தொழிலாளியை மர்ம நபர் கட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் தங்கி கண்ணன் என்பவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 29-ஆம் தேதி மர்ம நபர் ஒருவர் கண்ணனை ஓட ஓட விரட்டி சென்று தலையில் பலமாக கட்டையால் அடித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனையடுத்து படுகாயமடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குளித்து கொண்டிருந்த நண்பர்கள்…. திடீரென வந்த ராட்சத அலை…. தேடுதல் பணி தீவிரம்…!!

கடலில் குளித்து கொண்டிருந்த போது ராட்சத அலையில் சிக்கி மாணவன் காணாமல் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள பல்லாவரம் பகுதியில் அக்பர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தாம்பரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகின்றார். இந்நிலையில் அக்பர் தனது நண்பர்களான யுவராஜ், சதீஷ்குமார், ரீகன், சேக், தமிழ், புருஷோத்தமன் போன்றோருடன் மெரீனா கடற்கரைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து யுவராஜ், ரீகன், புருஷோத்தமன், அக்பர் ஆகிய 4 பேரும் கடலில் குளித்து கொண்டிருந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொழுந்து விட்டு எரிந்த குடோன்…. திடீரென ஏற்பட்ட தீ விபத்து…. சென்னையில் பரபரப்பு…!!

குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கோயம்பேடு பகுதியில் இருக்கும் ஒரு குடோனில் சினிமா படப்பிடிப்புக்கு அரங்கம் அமைக்க தேவைப்படும் அலங்காரப்பொருட்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்த குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கிருந்த அனைத்து அலங்கார பொருட்களும் எரிந்து பல அடி உயரத்திற்கு கரும் புகை மூட்டம் எழுந்துள்ளது. மேலும் இந்த தீ விபத்தில் இருக்கும் மரங்கள் எரிந்து நாசமாகி விட்டது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

5 லட்ச ரூபாய் எங்கே….? அம்மா மருந்தகத்தில் நடந்த வேலை…. பெண் ஊழியர்கள் கைது…!!

5 லட்ச ரூபாய் பணத்தை கையாடல் செய்த குற்றத்திற்காக அம்மா மருந்தக பெண் ஊழியர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள போரூர் ட்ரங்க் சாலையில் அம்மா மருந்தகம் செயல்பட்டு கொண்டிருக்கிறது.இங்கு மருந்தாளர் சுபாஷினி, உதவி விற்பனையாளர் கிறிஸ்டோபர் போன்றோர் பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில் இந்த மருந்தகத்தில் 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள மருந்து பொருட்களை விற்பனை செய்து அந்த பணத்தை கையாடல் செய்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து கூட்டுறவு பண்டகசாலை தலைவர் தேவராஜ் காவல் நிலையத்தில் புகார் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“தலையணையில் இருந்த பணம்” வீசி சென்ற ஆட்டோ டிரைவர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை…!!

புகார் கொடுத்த 3 மணி நேரத்திலேயே தலையணையில் மறைத்து வைக்கப்பட்ட பணத்தை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள ஆண்டார்குப்பம் பகுதியில் சந்தபீவி என்பவர் வசித்து வருகிறார். இவர் முருகன் என்பவரது ஆட்டோவில் திருவொற்றியூர் விம்கோ நகர் ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளார். இதனை அடுத்து சந்தபீவி டெல்லி விரைவு ரயிலில் ஏறிய பிறகு தலையணையில் தான் மறைத்து வைத்திருந்த 90 ஆயிரம் ரூபாய் பணம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து உடனடியாக சந்தபீவி தனது மகனான […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மொத்தம் 5 கோடி ரூபாய் மதிப்பு…. கோவில் நிலம் மீட்பு….. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

கோவிலுக்கு சொந்தமான 5 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அதிகாரிகள் மீட்டனர். சென்னை மாவட்டத்தில் உள்ள மயிலாப்பூரில் கபாலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான 2,166 சதுர அடி நிலத்தை வாடகைக்கு விட்டுள்ளனர். கடந்த 2012 -ஆம் ஆண்டு அந்த நிலத்தில் கோசாலை அமைக்க கோவில் நிர்வாகத்தினர் திட்டமிட்டனர். இதனையடுத்து அந்த நிலத்தை கோவில் நிர்வாகத்தினரிடம் ஒப்படைக்குமாறு அங்கு கடை வைத்திருப்பவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கினை நீதிமன்றம் தள்ளுபடி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“திருமணத்திற்கு பிறகு கொடுங்கள்” இளம்பெண்ணின் தற்கொலை வழக்கு…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவர் மற்றும் மாமியாருக்கு நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கிண்டி சதானிபேட்டை பகுதியில் பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2010-ஆம் ஆண்டு இவருக்கு சுகன்யா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. அப்போது மோட்டார் சைக்கிள் மற்றும் 7 பவுன் தங்க நகையை வரதட்சணையாக கேட்ட போது சுகன்யாவின் தந்தை, தாய் மாமா ஆகியோர் இவ்வளவு வரதட்சனை கொடுக்க முடியாது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“முறையாக பராமரிக்கவில்லை” கழிவுநீரால் சுகாதார சீர்கேடு…. பொதுமக்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை முறையாக பராமரிக்காததை கண்டித்து 100-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள அயப்பாக்கத்தில் இருக்கும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் இருக்கும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை முறையாக பராமரிக்காமல் உள்ளனர். இதனால் அங்கிருந்து வெளியேறும் கழிவுநீர் சாலைகளிலும், குடியிருப்புகளிலும் ஆறாக ஓடி சுகாதார சீர்கேட்டுக்கு வழி வகுக்கிறது. எனவே 100-க்கும் மேற்பட்டோர் அந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

காரில் சென்ற போலீஸ்காரர்….. மயக்க ஊசி செலுத்திய கும்பல்…. சென்னையில் பரபரப்பு…!!

உளவுப்பிரிவு போலீசை கடத்தி சென்று 1 லட்ச ரூபாயை 3 பேர் கொண்ட கும்பல் மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள சூளைமேடு பகுதியில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவர் உளவு பிரிவில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் வேலைக்கு செல்வதற்காக வீட்டிலிருந்து புறப்பட்ட ரவியை அதே பகுதியில் வசிக்கும் அஜய் விக்கி என்பவர் காரில் ஏற்றி சென்றுள்ளார். இதனை அடுத்து கார் சிறிது தூரம் சென்றவுடன் அஜய் விக்கியும், காரில் இருந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மாயமான பயிற்சி மருத்துவர்…. ஒலிப்பெருக்கியில் அழைத்த பெற்றோர்…. தொடரும் தேடுதல் பணி….!!

ஆற்றில் குளித்து கொண்டிருக்கும் போது தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட பயிற்சி மருத்துவரை தேடும் பணியானது தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. சென்னை மாவட்டத்தில் உள்ள மாம்பலம் பகுதியில் ஸ்ரீராம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் பயிற்சி மருத்துவராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஸ்ரீராம் உட்பட 5 பயிற்சி மருத்துவர்கள் வால்பாறை பகுதியில் அனைத்து இடங்களையும் சுற்றி பார்த்துவிட்டு சோலையார் அணைக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் பயிற்சி மருத்துவர்கள் அனைவரும் ஆற்றில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சுற்றுலா சென்ற நண்பர்கள்….. பயிற்சி மருத்துவரின் நிலைமை….? தேடுதல் பணி தீவிரம்…!!

நண்பர்களுடன் சுற்றுலா சென்ற பயிற்சி மருத்துவர் ஆற்றில் குளித்து கொண்டிருக்கும் போது தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள மாம்பலம் பகுதியில் ஸ்ரீராம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் பயிற்சி மருத்துவராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஸ்ரீராம் உட்பட 5 பயிற்சி மருத்துவர்கள் வால்பாறை பகுதியில் அனைத்து இடங்களையும் சுற்றி பார்த்துவிட்டு சோலையார் அணைக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் பயிற்சி மருத்துவர்கள் அனைவரும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நேர்ந்த கொடுமை…. உடந்தையாக இருந்த தாய்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த குற்றத்திற்காக 3 பேரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள டி.பி சத்திரம் பகுதியில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் குளிர்பான கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் பெருமாளுக்கும், அதே பகுதியில் வசிக்கும் 30 வயது பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறி விட்டது. இதனையடுத்து பண ஆசை காட்டியும், மிரட்டியும் அந்த பெண்ணின் 9 வயது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

போதையில் தூங்கிய திருடன்…. அடித்து உதைத்த பொதுமக்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

திருடச்சென்ற இடத்தில் மது போதையில் தூங்கிய நபரை பொதுமக்கள் அடித்து உதைத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். சென்னை மாவட்டத்திலுள்ள அம்பத்தூர் பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் அதிகாலை நேரத்தில் கண்ணன் தனது செல்போன் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனால் காணாமல் போன தனது செல்போனை கண்ணன் அனைத்து இடங்களிலும் தேடி பார்த்துள்ளார். அப்போது வீட்டின் பழைய பொருட்கள் போட்டு வைக்கும் அறையில் மதுபோதையில் ஒருவர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த கார்…. கால்வாய்க்குள் பாய்ந்ததால் பரபரப்பு…. அதிர்ஷ்டவசமாக தப்பிய இருவர்…!!

வேகமாக சென்ற கார் வளைவில் திரும்பும் போது கால்வாய்க்குள் பாய்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள திருப்போரூருக்கு மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை வழியாக 2 பேர் காரில் சென்றுள்ளனர். இவர்கள் பக்கிங்காம் கால்வாய் அருகில் வேகமாக வாகனத்தை இயக்கியுள்ளனர். இதனால் வளைவு பகுதியில் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்த கார் கால்வாய்க்குள் பாய்ந்து விட்டது.  இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள் உடனடியாக தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்த இருவரையும் பத்திரமாக மீட்டனர். அதன்பிறகு அவர்களை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இழுத்து சென்ற ராட்சத அலை…. நண்பர்களுக்கு நடந்த விபரீதம்…. தேடுதல் பணி தீவிரம்…!!

நண்பர்களுடன் குளித்து கொண்டிருக்கும் போது கல்லூரி மாணவர்கள் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள பழவந்தாங்கல் பகுதியில் மேத்யூ என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் மேத்யூ தனது நண்பர்களான பெண்ஸ்டன் உட்பட நான்கு பேருடன் திருவான்மியூர் கடற்கரைக்கு குளிக்க சென்றுள்ளார். இதனை அடுத்து நண்பர்கள் அனைவரும் குளித்து கொண்டிருந்த போது மேத்யூ மற்றும் பெண்ஸ்டன் ஆகிய இருவரையும் ராட்சத அலை கடலுக்குள் இழுத்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“காற்றுக்காக திறந்து வைத்தேன்” அதிர்ச்சியடைந்த உரிமையாளர்…. போலீஸ் நடவடிக்கை…!!

தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை திருடி சென்ற குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணா சாலை பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் மணிகண்டன் காற்றுக்காக தனது வீட்டு கதவை திறந்து வைத்து தூங்கியுள்ளார். அப்போது உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் வீட்டில் இருந்த வெள்ளி பொருட்கள், 2 செல்போன்கள் மற்றும் 18 பவுன் தங்க நகைகளை திருடி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து மணிகண்டன் காவல்நிலையத்தில் புகார் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

காருக்குள் இருந்த வாலிபர்கள்…. அடையாளம் காண்பித்த டிரைவர்…. போலீஸ் நடவடிக்கை…!!

கால் டாக்ஸி டிரைவரை தாக்கி கையடக்க கணினியை பறித்து சென்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள கோடம்பாக்கம் பகுதியில் கால் டாக்சி டிரைவரான செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் முகப்பேர் மேற்கு பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு வாலிபர்களை சவாரிக்காக அழைத்து சென்றுள்ளார். இந்நிலையில் அயப்பாக்கம் பெருமாள் கோவில் பக்கத்தில் சென்று கொண்டிருந்த போது அந்த வாலிபர்கள் காரை நிறுத்துமாறு கூறியுள்ளனர். அதன் பின் காரில் இருந்து இறங்கிய வாலிபர்கள் செந்தில் குமாரை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நிலைதடுமாறிய வாகனம்…. போலீஸ்காரருக்கு நடந்த விபரீதம்… சென்னையில் கோர விபத்து…!!

மொபட்டில் இருந்து தவறி கீழே விழுந்த போலீஸ்காரர் மீது கார் ஏறி இறங்கி விபத்துக்குள்ளான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள விருகம்பாக்கம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டராக தனபால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனோஜ்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் ராயலா நகர் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மனோஜ்குமார் இரவு நேரத்தில் வேலை முடித்து விட்டு தனது மொபட்டில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இதனை அடுத்து கோவிந்தன் சாலையில் இருக்கும் பெட்ரோல் நிலையம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பொய்யான வழக்கு…? தற்கொலை மிரட்டல் விடுத்த ரவுடி…. சென்னையில் பரபரப்பு…!!

செல்போன் கோபுரத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த ரவுடியை காவல்துறையினர் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள கொடுங்கையூர் பகுதியில் ரவுடியான மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவியும், ஒரு வயதில் குழந்தையும் இருக்கின்றனர். இவர் மீது காவல் நிலையங்களில் 7 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. தற்போது எந்த குற்ற செயல்களிலும் ஈடுபடாமல் மணிகண்டன் தனது வாழ்க்கையை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மணிகண்டன் சின்னாண்டிமடம் தண்டையார்பேட்டை நெடுஞ்சாலையில் இருக்கும் செல்போன் கோபுரத்தின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

படியில் நின்ற போலீஸ்காரர்…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ரயிலிலிருந்து தவறி கீழே விழுந்து போலீஸ்காரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மேலக்கோட்டையூர் போலீஸ் குடியிருப்பில் மோகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கீழ்ப்பாக்கம் ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் பணி முடிந்த பிறகு மோகன் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸில் எழும்பூருக்கு சென்றுள்ளார். இதனையடுத்து சேத்துப்பட்டு எழும்பூர் ரயில் நிலையம் அருகில் ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது படியில் நின்று கொண்டிருந்த மோகன் திடீரென கால் தவறி கீழே […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நகை கடையில் தீ விபத்து…. அலறியடித்து ஓடிய ஊழியர்கள்…. சென்னையில் பரபரப்பு….!!

திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் நகை கடை முழுவதும் பற்றி எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள என்.எஸ்.சி போஸ் சாலையில் தனியாருக்கு சொந்தமான நகை கடை ஒன்று செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்நிலையில் அந்த நகை கடையில் ஊழியர்கள் வேலை பார்த்து கொண்டிருந்த சமயத்தில் திடீரென அங்கு மட்டும் மின்சாரம் தடைபட்டுள்ளது. இதனால் நகை கடையின் ஊழியர்கள் சிறிது நேரம் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீ விபத்தால் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உடல் முழுவதும் பற்றி எரியும் தீ…. மேம்பாலத்திலிருந்து குதித்த வாலிபர்…. சென்னையில் பரபரப்பு…!!

உடல் முழுவதும் தீ வைத்து கொண்ட வாலிபர் மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்து உடல் கருகி இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள வில்லிவாக்கம் பகுதியில் பாலாஜி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சத்யநாராயணன் மற்றும் சூரிய நாராயணன் என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இதில் சூரிய நாராயணனுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால் சத்தியநாராயணனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் வடபழனியில் இருக்கும் சங்கரமடத்தில் சமையல்காரராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சத்யநாராயணன் வண்டலூர்-மீஞ்சூர் புறவழிச்சாலையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“சேர்ந்து வாழ்வதற்கு மறுப்பு” பெண்ணின் தற்கொலை முயற்சி…. சென்னையில் பரபரப்பு…!!

கணவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பெண் துணை கமிஷனர் அலுவலகத்திற்கு சென்று தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள திருமுல்லைவாயல் பகுதியில் கவிதா என்ற பெண் வசித்து வருகிறார். 2019ஆம் ஆண்டு எல்லப்பன் என்பவரை கவிதா பதிவு திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தியுள்ளார். இந்நிலையில் தண்டையார்பேட்டை பகுதியில் வசிக்கும் வேறு ஒரு பெண்ணுடன், எல்லப்பனுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கவிதாவை விட்டு பிரிந்து எல்லப்பன் அந்தப் பெண்ணுடன் தனியாக வசித்து வருகிறார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உறவினர்களுடன் சென்ற மீனவர்…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

படகிலிருந்து தவறி கடலுக்குள் விழுந்த மீனவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள காசி கோவில் குப்பம் பகுதியில் மீனவரான ஆறுமுகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஆறுமுகம் தனது உறவினர்களான மற்றொரு ஆறுமுகம் மற்றும் ராஜேந்திரன் ஆகியோருடன் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றுள்ளார். இவர்கள் மீன் பிடித்த பிறகு காலையில் மீண்டும் கரைக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் படகிலிருந்து எதிர்பாராதவிதமாக கால்தவறி ஆறுமுகம் கடலுக்குள் விழுந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

முதியவரை தாக்கிய வாலிபர்கள்…. மடக்கி பிடித்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

முதியவரை தாக்கி பணம் பறிக்க முயன்ற 2 வாலிபர்களை பொதுமக்கள் மடக்கி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்து விட்டனர். சென்னை மாவட்டத்திலுள்ள கோவூர் அருகில் முதியவர் ஒருவர் நடந்து சென்றுள்ளார். இந்நிலையில் 2 மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து முதியவரை சரமாரியாக அடித்து அவரிடம் இருந்த பணத்தை பறிப்பதற்கு முயற்சி செய்துள்ளனர். இதனை பார்த்ததும் அங்கிருந்த பொதுமக்கள் மர்மநபர்களை பிடிப்பதற்காக சென்றுள்ளனர். அதன் பின் மோட்டார் சைக்கிளில் தப்பி செல்ல முயன்ற போது, நிலைதடுமாறி கீழே […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கேபிளை சரி செய்த ஊழியர்…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி செல்போன் நிறுவன ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள குன்றத்தூர் பகுதியில் ராஜேஷ் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் செல்போன் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜேஷ்குமார் வானகரம் பகுதியில் மழையால் சேதமடைந்த இன்டர்நெட் கேபிளை சரி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இதனை அடுத்து எதிர்பாராதவிதமாக இன்டர்நெட் வயரில் இணைப்பு கொடுக்கும் போது மின்சார வயரில் ராஜேஷ்குமாரின் கை உரசியதால் அவர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் தூக்கி சென்ற இருவர்…. காட்டி கொடுத்த சிசிடிவி காட்சிகள்…. உரிமையாளரின் பரபரப்பு புகார்…!!

விலை உயர்ந்த நாய்க்குட்டியை 2 பேர் திருடி செல்லும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள விருகம்பாக்கம் பகுதியில் ஸ்ரீதர் என்பவர் வசித்து வருகிறார். இவர் விலை உயர்ந்த நாய்க்குட்டியை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்த அந்த விலை உயர்ந்த நாய்க்குட்டி திடீரென காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த ஸ்ரீதர் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்துள்ளார். அப்போது 2 மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து நாயை […]

Categories

Tech |