தமிழகத்தில் இரு நாட்களுக்கு மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வேலூர் மாவட்டம் கிரிசமுத்திரம், வாணியம்பாடி, ஆம்பூர், செட்டியப்பனூர் உள்ளிட்ட பகுதிகளில் இரண்டு நாட்கள் மிதமான மழை பெய்தது.திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்றுக்கு முந்தைய நாள் இரவு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ததுடன் , சேத்துப்பட்டு, போளூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பரவலாக கொட்டித் தீர்த்தது. இதைத்தொடர்ந்து வேலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தர்மபுரி, விழுப்புரம், நாமக்கல் ,பெரம்பலூர், திருச்சி, […]
