சென்னை அண்ணாசாலையில் போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,629 ஆக அதிகரித்துள்ள. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சென்னையில் தான் அதிகமாக உள்ளது. அங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது 373ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 117 பேருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களிலும் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அம்பத்தூரை தொடர்ந்து கடைசியாக 15 ஆவது மண்டலமாக மணலியிலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது […]
