நோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறுத்தையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்துவிட்டனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பெரியகோம்பை மலை கிராமம் அமைந்துள்ளது. இது குடியிருப்புகள் எதுவும் இல்லாத அடர்ந்த வனப்பகுதியாக இருப்பதால் மான், காட்டெருமை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் இங்கு வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் கன்னிவாடி வனச்சரகர் தலைமையில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஒரு புதருக்குள் சிறுத்தை ஒன்று ஊர்ந்து சென்றதை பார்த்த வனத்துறையினர் அதன் காலில் ஏதேனும் காயம் ஏற்பட்டு இருக்குமோ என சந்தேகம் […]
