செங்கல்பட்டில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக சமூகவலைதளங்களில் வெளியான வீடியோவால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள அஞ்சூர், திருவடிசூலம், அலமேலுமங்காபுரம், வேன்பாக்கம் உள்ளிட்ட ஏரியாக்கள் வனப்பகுதிக்கு மிக அருகாமையில் அமைந்துள்ளன. இந்த இடங்களில் கடந்த ஐந்து ஆண்டிற்கும் அதிகமாக சிறுத்தை நடமாட்டம் காணப்படுவதாக பொதுமக்கள் தொடர்ந்து தகவல் தெரிவித்து வந்த வண்ணம் இருந்தனர்.ஆகையால் சிறுத்தையை பிடிப்பதற்காக வனத்துறையினரும் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து சிறுத்தை நடமாட்டம் உள்ளதா என்பதை கண்காணிப்பதுடன் தானியங்கி கூண்டுகளை அமைத்து […]
