நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு முக்கிய பகுதிகளில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர், குன்னூர், ஊட்டி, நெல்லியாளம் ஆகிய 4 நகராட்சிகள் மற்றும் 11 பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. எனவே வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வாகனங்களில் பணம் கொண்டு செல்லப்படுகிறதா என்பதை கண்டுபிடிப்பதற்காக 45 பறக்கும் படை குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஊட்டி நகராட்சியில் மத்திய பேருந்து நிலையம், ஊட்டி-கோத்தகிரி சாலை சந்திப்பு […]