வங்கி ஊழியர் போல பேசி ரூபாய் 3 கோடி மோசடி செய்த மூன்று நபர்களை டெல்லியில் வைத்து தமிழக காவல்துறை கைது செய்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே மக்களிடம் வங்கியில் பணிபுரியும் நபர்கள் போல செல்போனில் பேசி புதிய ஏடிஎம் கார்டு, கிரெடிட் கார்டு, கடன் உள்ளிட்டவற்றை வழங்குவதாக கூறி ஓடிபி என் ஏடிஎம் அட்டையின் ரகசிய எண் உள்ளிட்டவற்றை சூசகமாக பெற்றுக்கொள்வர். அதன்பின் அவர்களது வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை அபேஸ் செய்து விடுவர். […]
