பரிகார பூஜை செய்வதாக கூறி தங்க நகையை மோசடி செய்த வாலிபருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பகுதியில் முத்துராமலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கோவில்பட்டி பகுதியில் வசிக்கும் அய்யனாரின் மனைவியான பேச்சியம்மாள் என்ற பெண்ணிடம் தங்க நகையை வைத்து பரிகாரம் செய்தால் குடும்ப பிரச்சினை தீரும் என்று கூறி முத்துராமலிங்கம் பூஜை நடத்தியுள்ளார். […]
