தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்ததால் சிகிச்சை அளித்த போலி மருத்துவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தடதாரை கிராமத்தில் தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் நாச்சிக்குப்பம் கூட்டு ரோடு சாலையில் மருந்தகம் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்ட தனியார் நிறுவன ஊழியரான பிரபாகரன் என்பவர் மருந்து கடைக்கு சென்று தேவராஜிடம் சிகிச்சை பெற்றுள்ளார். இதனை அடுத்து வீட்டிற்கு வந்த பிரபாகரனின் உடல்நிலை மிகவும் மோசமானதால் உடனடியாக அவரை வேப்பனப்பள்ளி […]
