ஏல சீட்டு பணத்தை மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என லாரி ஓட்டுநர் தனது குடும்பத்துடன் வந்து புகார் அளித்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுஇடையம்பட்டி பகுதியில் லாரி ஓட்டுநரான பாஸ்கர்(40) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மனைவி மற்றும் மூன்று பெண் குழந்தைகளுடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்று மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, கணியம்பாடி பகுதியில் வசிக்கும் இரண்டு பேர் இணைந்து மாத ஏல சீட்டு நடத்தியுள்ளனர். […]
