மருத்துவர்களால் இறந்ததாக கூறப்பட்ட மூதாட்டி தகனம் செய்யும் இடத்தில் உயிர் பெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் ராய்ப்பூர் நகரில் லக்ஷ்மி பாய் என்ற வயதான மூதாட்டி ஒருவர் வாழ்ந்து வந்தார். இவருக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவரது குடும்பத்தினர் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு லட்சுமிபாய்க்கு பரிசோதனை நடந்த போது அவரின் உடல் உறுப்புகள் அனைத்தும் செயலிழந்து இருந்தது. இந்த பரிசோதனையின் முடிவில் மருத்துவர்கள் லக்ஷ்மிபாய் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். […]
