விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக பஸ் யாத்திரா மேற்கொள்ளவிருந்த முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார். ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி உருவாக்கிய ஜி.என். ராவ் குழு ஆந்திராவிற்கு மூன்று தலைநகரங்களை உருவாக்க வேண்டும் என அறிக்கை சமர்ப்பித்தது. அதன்படி அமராவதி சட்டப்பேரவை தலைநகராகவும், விசாகப்பட்டினம் நிர்வாகத் தலைநகராகவும், கர்னூல் நீதித்துறை தலைநகராகவும் பிரிக்கப்பட ஆலோசனை செய்யப்படும் என்று கடந்த டிசம்பர் 17ஆம் தேதி ஜெகன்மோகன் ரெட்டி கூறியிருந்தார். ஆனால், அமராவதியை தலைநகராக்கும் திட்டத்திற்காக நிலங்கள் […]
