கடந்த மக்களவைத் தேர்தலின் போது மோடித் தலைமையிலான பாஜக-வுக்கு எதிராக அணி திரட்டிய சந்திரபாபு நாயுடு மீண்டும் பாஜக பக்கம் திரும்பச் சமிக்ஞை காட்டுவதாக தெரிகிறது. ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சரும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு 2019ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியிடம் ஆட்சியைப் பறிகொடுத்தார். பாஜகவுடன் நீண்ட காலம் கூட்டணியிலிருந்த சந்திரபாபு 2018ஆம் ஆண்டு கூட்டணியிலிருந்து வெளியேறி மோடி தலைமையிலான பாஜக-வை கடுமையாகத் தாக்கத் […]
