தஞ்சையில், கோவிலில் சாமி கும்பிடும் போது 4 பவுன் செயின் திருடு போனது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையை அடுத்த சூரப்பள்ளம் பிரதான சாலை தெருவைச் சேர்ந்தவர் திருஞானத்தின் மனைவி 75 வயதான சீதாலெட்சுமி . இவர் கரம்பயம் மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்து பார்த்த போது கழுத்தில் இருந்த 4 பவுன் செயின் காணாமல் போனதை கண்டு அதிர்ந்தார். கோவிலில் சாமி கும்பிடும் போது, கூட்டத்தில் மர்ம நபர் யாரோ சீதாலெட்சுமியின் செயினை […]
