மூதாட்டியிடம் 7 பவுன் தங்க சங்கிலியை பறித்துகொண்டு தப்பிச்சென்ற இரண்டு மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள ஆண்டிப்பட்டி கிராமத்தில் வெங்கடசாமி-ராஜலட்சுமி என்ற வயது முதிர்ந்த தம்பதியர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ராஜலட்சுமி நேற்று அதிகாலை தனது வீட்டு வாசலில் கோலம் போட்டு கொண்டிருந்தார். அந்த சமயத்தில் இரண்டு மர்மநபர்கள் ஒரு இருசக்கர வாகனத்தில் அந்தப் பகுதியில் சுற்றிக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர் மட்டும் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே இறங்கி ராஜலட்சுமியின் […]
