இன்று முதல் நாளைக்கு ஒருமுறை மட்டுமே கொரோனா பாதிப்பு தகவல் தெரிவிக்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 49,391 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,694 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 617 பேரும், குஜராத்தில் 368 பேரும், மத்திய பிரதேசத்தில் 176 பேரும் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். மேலும் மேற்குவங்கத்தில் 140 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 14,183 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் […]
