மத்திய அரசின் உதவித்தொகை பெறுவதற்கான தேர்வை 3012 மாணவ மாணவிகள் எழுதியுள்ளனர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு மத்திய அரசின் உதவித்தொகை பெறுவதற்கான தேர்வு நேற்று முன்தினம் பெரம்பலூர் மாவட்டத்தில் 11 மையங்களிலும் அரியலூர் மாவட்டத்தில் 15 மையங்களிலும் நடைபெற்றுள்ளது. இந்தத் தேர்வு இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்டுள்ளது. அதாவது காலை 9.30 மணி முதல் 11 மணி வரை மனத்திறன் தேர்வும் அதன்பின் 11.30 மணி முதல் […]
