கவுண்டம்பாளையம் பகுதியில் கட்டிட கான்டிராக்டர் வீட்டிற்குள் நுழைந்து கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் அருகே சுப்பிரமணியம்பாளையம் என் .பி .சி நகரில் வசித்து வரும் கட்டிட கான்டிராக்டர் கார்த்திக் என்பவரின் வீட்டின் கதவை உடைத்து பட்டப்பகலில் மர்ம ஆசாமிகள் புகுந்தனர். வேலைக்காரியான மூதாட்டியை தாக்கி விட்டு வீட்டில் இருந்த 33 சவரன் நகைகள் மற்றும் இருபது ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்தையும் கொள்ளையடித்து சென்றனர்.இச் சம்பவம் குறித்து கட்டிட காண்டிராக்டர் துடியலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். […]
