தமிழகத்தில் தனியார் பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமரா பொறுத்த கால அவகாசம் வழங்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என மாநில பொதுச் செயலாளர் கூறியுள்ளார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் நேற்று தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் பள்ளிகளின் சங்க கூட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் மருத்துவ படிப்பிற்கு தேர்வான மாணவி ஸ்ரீமதிக்கு கேடயம் வழங்கப்பட்டது. இதன்பின் மாநில பொதுச் செயலாளர் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது, தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் […]
