இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட வியாபம் ஊழல் வழக்கில் 31 பேரை குற்றவாளிகளாக அறிவித்து சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. நாட்டையே உலுக்கிய மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற ‘வியாபம்’ ஊழல் தொடர்பான வழக்கில் தற்போது சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பல சந்தேக மரணங்கள், திகில்கள் நிறைந்திருந்த இவ்வழக்கில் மொத்தம் 31 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும், அவர்களுக்கான குற்றங்கள் குறித்த விவரம் நவ.25ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று சிபிஐ சிறப்பு நீதிபதி எஸ்.பி. சாஹூ […]
