2021இல் நடத்தப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது, சாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பாமக மாநில பொருளாளர் திலகபாமாவின் இல்ல திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தத் திருமண நிகழ்ச்சியில் பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அன்புமணி ராமதாஸ் கூறுகையில், “சிவகாசியில் 8 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட விவாகரம் […]
