உரிய ஆவணமின்றி 467 கோடியே 88 லட்ச ரூபாய் தமிழகத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் இதுவரை உரிய ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட 183 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே, தமிழ்நாட்டில் தான் பணமும், தங்கமும் அதிகளவு சிக்கியுள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் நாள் அறிவித்தது முதல் இன்றுவரை, நாடு முழுவதும் பறிமுதல் செய்யப்பட்ட, பணம், தங்கம், மதுபானம், போதைப் பொருட்கள் உள்ளிட்டவற்றின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. […]
