மனைவியின் தந்தைக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவன் உள்பட 4 பேர் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வானவரெட்டி கிராமத்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பரமேஸ்வரி என்ற மகள் உள்ளார். இந்நிலையில் ஆறுமுகத்தின் மகள் பரமேஸ்வரியும் பார்த்திபன் என்பவரும் கடந்த 6 வருடங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். அதன்பின் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பரமேஸ்வரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் […]