திமுக நிர்வாகிய தாக்கிய 8 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தேனி மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி மெயின் தெருவில் ரத்தின சபாபதி என்பவர் வசித்து வருகிறார். இவர் தெற்கு ஒன்றிய தி.மு.க பொறுப்பாளராக இருந்து வருகிறார். இந்நிலையில் ரத்ன சபாபதி வீடு புகுந்த மர்ம கும்பல் கற்கள் மற்றும் உருட்டுக்கட்டையால் அவரை தாக்கியுள்ளனர். அதன்பின் வீட்டின் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் காயமடைந்த ரத்தினசபாபதி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். […]
