கேரள நடிகை தாக்கப்பட்ட விவகாரத்தில் வழக்கின் விசாரணையை கூடுதல் சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. பிரபல மலையாள நடிகை காரில் கடத்தப்பட்டு 2017ஆம் ஆண்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தல் செய்யப்பட்டார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பாக முக்கிய குற்றவாளியான பல்சர் சுனில் உள்ளிட்ட சிலரை கேரள காவல் துறை கைது செய்தது. இந்த வழக்கு விசாரணையில் இதன் பின்னணியில் பிரபல மலையாள நடிகர் திலீப் மூளையாக செயல்பட்டதாகக்கூறி அவரை காவல் துறையினர் கைது செய்து […]
