கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பூலாம்பட்டி பகுதியில் விவசாயியான முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் பழனி அடிவார பகுதியில் நடந்த உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக குடும்பத்துடன் காரில் சென்றுள்ளார். அந்த காரை அய்யம்புள்ளி சாலையோரமாக நிறுத்திவிட்டு அனைவரும் மண்டபத்திற்கு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக காரின் முன்பகுதி தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ […]
