சாலையில் ஓடி கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்த விபத்தில் அதிஷ்டவசமாக இருவர் உயிர் தப்பிவிட்டனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள சுரைக்காய்பட்டி இப்பகுதியில் கணேசன் என்பவர் வசித்துவருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கணேசன் சென்னை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். இந்த காரை கதிர்வேல் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வடமதுரை பைபாஸ் பிரிவு அருகே சென்றுகொண்டிருந்தபோது திடீரென காரின் முன் பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியது. […]
