ஓட்டப்பயிற்சி மேற்கொண்ட இளைஞர் கார் மோதி உயிரிழந்தார். குற்றவாளியை கைது செய்ய கோரி உறவினர்கள் போராட்டம் நடத்தினர். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உடையாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விக்னேஸ்வரன். இவர் இந்திய ராணுவத்தில் சேர்வதற்காக பயிற்சி மேற்கொண்டு வந்தார். இதற்காக மதுரை ராமேஸ்வரம் நான்கு வழி சாலையில் ராஜகம்பீரம் அருகே விக்னேஸ்வரன் அதிகாலைப் பொழுதில் ஓட்டப்பயிற்சி மேற்கொண்டிருந்த போது அந்த வழியாக வேகமாக வந்த அடையாளம் தெரியாத கார் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இந்த […]
