மோட்டார் சைக்கிளில் சென்றவர் கார் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருத்துறைப்பூண்டியை சார்ந்தவர் ஷேக் அலாவுதீன். இவர் தனது காரில் முத்துப்பேட்டைக்கு வந்து விட்டு திரும்பி சென்று கொண்டிருந்தார். அச்சமயம் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் தங்கராஜ் என்ற விவசாயி வந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள் மீது திடிரென கார் மோதியதில் தங்கராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த எடையூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்பு தங்கராஜன் உடல் […]
