மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி பகுதியைச் சார்ந்தவர் செங்கதிர்வேல். இவர் நேற்று தனது நண்பரின் திருமண நிகழ்ச்சியில் கலந்துவிட்டு வீட்டிற்கு திரும்பும் வழியில் நண்பர்களான வசந்த் மற்றும் ராகுலை அழைத்துகொண்டு மோட்டார் சைக்கிளில் புதுக்கோட்டை அறந்தாங்கி சாலையில் வந்து கொண்டிருக்கும் போது அதே சாலையில் நாகப்பட்டினத்தை நோக்கி ராஜேந்திரன் என்பவர் காரில் வந்துள்ளார். பின்னர் திடீரென்று எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது ராஜேந்திரனின் […]
