காஷ்மீர் விவகாரத்தில் பிரதமர் மோடி புத்திசாலித்தனமாக முடிவு எடுத்திருப்பதாக தேமுதிக பிரேமலதா தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா அத்திவரதரை தரிசனம் செய்தார். பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், காஷ்மீர் பிரச்சனை இன்று இந்தியா மட்டுமல்லாமல் உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. இதில் மாற்றுக் கட்சிகள் ஒவ்வொருவரும் ஓவ்வொரு கருத்தைச் சொன்னாலும், இந்தியாவின் சுதந்திரத்திற்கு இனிமேல் இது சிறந்ததாக இருக்கும் என்பதே தேமுதிகவின் கருத்து என தெரிவித்தார். இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து இந்த கஷ்மீர் பிரச்சினை […]
