நாளைய பஞ்சாங்கம் 08-06-2022, வைகாசி 25, புதன்கிழமை, அஷ்டமி திதி காலை 08.31 வரை பின்பு வளர்பிறை நவமி. உத்திரம் நட்சத்திரம் பின்இரவு 04.30 வரை பின்பு அஸ்தம். அமிர்தயோகம் பின்இரவு 04.30 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00 நாளைய ராசிப்பலன் – 08.06.2022 மேஷம் உங்களின் ராசிக்கு நீங்கள் மனமகிழ்ச்சியுடனும், சுறுசுறுப்புடனும் காணப்படுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கொடுக்கல் வாங்கலில் லாபம் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் பல போட்டிகளுக்கு இடையே வெற்றி கிட்டும். அலுவலகங்களில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக […]
