நாளைய பஞ்சாங்கம் 09-01-2021, மார்கழி 25, சனிக்கிழமை, ஏகாதசி திதி இரவு 07.17 வரை பின்பு தேய்பிறை துவாதசி. விசாகம் நட்சத்திரம் பகல் 12.32 வரை பின்பு அனுஷம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. ஏகாதசி விரதம். பெருமாள் வழிபாடு நல்லது. இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00. நாளைய ராசிப்பலன் – 09.01.2021 மேஷம் உங்களின் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் நிலையில் பாதிப்பு உண்டாகும். உத்தியோகம் சம்பந்தமாக புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லதைக் கொடுக்கும். மற்றவர் விஷயங்களில் தலையிடாமல் இருக்க வேண்டும். பயணங்களை தள்ளி வைக்கவும். எதிலும் கவனம் வேண்டும். ரிஷபம் உங்களின் ராசிக்கு உத்தியோகம் சம்பந்தமாக நீங்கள் எடுக்கும் முயற்சி […]
