மேஷம் ராசி அன்பர்களே…! இன்று உங்களுக்கு பலன்கள் கலந்தே காணப்படும். எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன்பு சிறப்பாக திட்டமிடுதல் அவசியமாகும். பணியிட சூழல் சவால் நிறைந்ததாக இருக்கும். இன்றைய நாள் சுமுகமாக இருக்க பணிகளை திட்டமிட்டு செயல்படவேண்டும். இன்று நீங்கள் மாறுபட்ட மனநிலையுடன் காணப்படுவீர்கள். உங்கள் துணையுடன் இதை வெளிப்படுத்தாதீர்கள். இன்று உங்களுக்கு பணவரவு சுமாராகவே இருக்கும்.உங்கள் நிதி நிலையை பற்றி பார்க்கும் பொழுது சிறப்பாக இருக்காது. இன்று அதிக செலவுகள் வர வாய்ப்பு உள்ளது. […]
