அசோக் நகர் அருகே கஞ்சா போதையில் தனியாக இருந்த பெண்ணின் வீட்டிற்குள் புகுந்த இளைஞருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். சென்னை அசோக் நகர் அம்பேத்கர் குடிசைப் பகுதியில் வசித்து வருபவர் கைலாசம். ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வரும் இவரது மனைவி பெயர் லலிதா(35). கைலாசம் நேற்றிரவு ஆட்டோ ஓட்டச் சென்றபின், லலிதா தனது மகளுடன் வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்துள்ளார். தனியாக இருந்த லலிதாவின் வீட்டிற்குள் நள்ளிரவு ஒரு மணியளவில் கஞ்சா போதையில் ஒரு இளைஞர் வந்துள்ளார். அவரைக் […]
