கஞ்சாவை வீட்டில் பதுக்கிய குற்றத்திற்காக 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் ரயிலடி பகுதியில் தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்து வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்படி தனிப்படை காவல்துறையினர் ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வேதம்பிள்ளைத் தெருவில் ஒரு வீட்டில் தனிப்படை காவல்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். அதில் 2 கிலோ 100 கிராம் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த […]
