வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த 3 பேரை கைது செய்து, அவரிடமிருந்த 141 கிலோ கஞ்சா, 80 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் பைக்கை போலீசார் பறிமுதல் செய்தனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிகரித்து வருவதாக மாவட்ட எஸ்.பி மணிவண்ணனுக்கு ரகசிய தகவல் வந்தது. இந்த தகவலையடுத்து எஸ்.பி மணிவண்ணன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு கஞ்சா விற்பனை செய்து வருபவர்களை வலைவீசி தேடிவந்தனர்.. இந்தநிலையில் தனிப்படை போலீசார் நேற்று […]
