ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட ராமன் என்பவரது மனு ஏற்கப்பட்ட பின்னர் அவர் பெயர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகக் கூறி பதிவான வாக்குகள் எண்ணப்படாதது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் இரு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டு பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, தேர்வுசெய்யப்பட்டவர்கள் நாளை மறுநாள் பதவியேற்க உள்ளனர். இந்நிலையில் அரியலூர் மாவட்டம் தா. பழூர் ஒன்றியத்திற்குள்பட்ட ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் உள்ள முதலாவது வார்டுக்கு மட்டும் வாக்கு எண்ணிக்கை நடைபெறவில்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது. […]
