நிலத்தை வாங்கிவிட்டு தந்தையை வீட்டை விட்டு வெளியேற்றிய மகனின் நில உரிமையை சப்-கலெக்டர் ரத்து செய்தார் நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் பகுதியில் ரத்தினவேலு என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு 2 மகள்கள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர். கடந்த 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் தேதி ரத்தினவேலு தனக்கு சொந்தமான 2 ஏக்கர் 7 சென்ட் நிலத்தை தானம் செட்டில்மெண்ட் ஆவணம் மூலம் தனது இளைய மகனாகிய ஆனந்த் என்பவரின் பெயரில் பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளார். […]
