தனியார் மருத்துவமனையில் ஆம்புலன்சை திருடி சென்ற வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 31ஆம் தேதி ஒரு தனியார் மருத்துவமனைக்கு சொந்தமான ஆம்புலன்ஸ் ஒன்று திருட்டு போனது. இச்சம்பவம் குறித்து அரியூர் காவல் நிலையத்தில் மருத்துவமனை மேலாளர் சிவக்குமார் என்பவர் புகார் கொடுத்தார். இதனையடுத்து அவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அந்த ஆய்வின் போது அரியூர் […]
