மத்திய அரசின் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. இம்மசோதாவிற்கு திமுக எதிர்ப்பும், அதிமுக ஆதரவும் தெரிவித்து வாக்களித்தன. இஸ்லாமியர்களையும், ஈழத் தமிழ் அகதிகளையும் வஞ்சிக்கும் இம்மசோதாவைக் கொண்டுவந்ததாக மத்திய அரசையும், அதற்கு ஆதரவளித்த தமிழக அரசையும் கண்டித்து திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சைதாபேட்டையில் திமுக இளைஞரணிச் செயலாளர் […]
