குடியுரிமை சட்டத்திருத்த மசோதா விவகாரத்தில் அதிமுக அரசு தமிழ் இனத்திற்கு துரோகம் இழைத்துள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். குடியுரிமை சட்டத்திருத்த மசோதா தொடர்பாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர், ”தேச விரோத சக்திகளின் தொடக்கம் இது. இந்தியாவின் முதுகெலும்பு என்று சொல்லப்படும் கிராமங்களில் விவசாயிகள் தற்கொலையை தடுக்காமல் அரசு சூழ்ச்சி செய்து வருகிறது. வாக்கு வங்கிக்காக […]
