சிதம்பரம் அருகேயுள்ள முட்லூர் அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மழையில் நனையக்கூடாது என்று கருதி, அப்பள்ளியின் தலைமையாசிரியர் அப்பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் குடை வாங்கிக் கொடுத்து அசத்தியுள்ளார். சிதம்பரம் அருகேயுள்ள சி.முட்லூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் 760 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் தலைமையாசிரியராகப் பணிபுரியும் மணிவாசகம், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு புதிய விஷயத்தைச் செய்துள்ளார்.தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ளதால், மாணவர்கள் மழையில் நனையாமல் பள்ளிக்கு வருவதற்கும், பள்ளி முடிந்து […]
