சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற அதிமுக_வின் 9 வேட்பாளர்கள் MLA_வாக பதவி ஏற்றுக்கொண்டனர். தமிழகத்தில் நடைபெற்ற 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக 13 இடங்களில் , அதிமுக 9 இடங்களில் வெற்றி பெற்றது. அதிமுக_வின் இந்த வெற்றியால் அரசுக்கு தேவையான பெரும்பான்மை கிடைத்துள்ளது. இந்நிலையில் இன்று சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர். தமிழக சட்ட பேரவையில் சபாநாயகர் தனபால் முன்னிலையில் வெற்றிபெற்ற அதிமுகவின் 9 வேட்பாளர்களும் சட்டமன்ற உறுப்பினர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர். […]
