பனிமூட்டம் அதிகமாக இருந்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதியதில் தொழிலதிபர்கள் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள நுங்கம்பாக்கம் பகுதியில் சண்முகசுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோயம்புத்தூருக்கு தனது நண்பர்களான அண்ணாநகர் பகுதியில் வசித்து வரும் வின்சென்ட் பாபு, பெரம்பூரில் வசித்து வரும் பாலசுப்பிரமணியன் மற்றும் நுங்கம்பாக்கத்தில் வசித்து வரும் கிருஷ்ணன் போன்றோருடன் தொழில் சம்பந்தமாக கோவைக்கு காரில் சென்றுள்ளார். இவர்கள் வேலையை முடித்துவிட்டு சென்னை திரும்பியுள்ளனர். இந்நிலையில் […]
