காரைக்காலில் நிலுவையில் உள்ள ஊதிய தொகையை வழங்க கோரி போக்குவரத்து கழக ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்ட காரைக்காலில் நிலுவையில் உள்ள நான்கு மாத ஊதிய தொகை வழங்காததை கண்டித்து இன்று அரசு சாலைப் போக்குவரத்துக் கழக பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் காரைக்கால் பணிமனையில் இருந்து சுமார் 10 பேருந்துகள் மட்டுமல்லாது புதுச்சேரி […]
